Ind vs Eng Odi Series: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
டி20 தொடரில் இந்தியாவை இங்கிலாந்து அணி வாஷ் அவுட் செய்தது. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் எஞ்சிய 4 போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி பர்மிங்காமில் நடந்தது. இந்தப்போட்டியில் சுப்கான் கில், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி சுப்மான் கில் (31), விராட் கோலி (65), ஷ்ரேயாஸ் ஐயர் (66) ஆகியோரை தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 44 ஓவர்களுக்கு 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்( 99 ரன்கள்)அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. ஜோ ரூட் 1 ரன்னில் சதத்தை தவறவிட்டார். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இவ்விரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றிப்பெற்றதால் ஆட்டம் 1-1 என்ற நிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிப்பெறும் அணி தொடரை கைப்பற்றும். இங்கிலாந்து மண்ணின் டி20 தொடரில் வாஷ் அவுட்டான இந்திய அணி இந்த போட்டியில் வெற்றிப்பெற்றும் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதையும் படிங்க: 526 கி.மீ மைலேஜ் கொடுக்கும் கியா சைரோஸ் EV.. விவரங்கள் இதோ அதேவேளையில் இங்கிலாந்து வீரர்களும் இந்தப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்குவார்கள் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்தபோட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1,4,5 ஆகிய சேனல்களில் நேரலை செய்கிறது. இதையும் படிங்க: யமஹா எலெக்ட்ரிக் பைக்.. Aerox Ev அட்டகாசமான ஸ்டைல்.. அசத்தலான மைலேஜ்.. ஆச்சர்யமான விலை இந்தியா இங்கிலாந்து அணிகள் இதுவரை 112 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் இந்தியா 62 போட்டிகளிலும், இங்கிலாந்து 45 போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இதில் மூன்று போட்டிகளில் முடிவு இல்லை. 2 போட்டிகள் சமனில் முடிந்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து போட்டியை எங்கு பார்க்கலாம்:
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல்:
இந்தியா: ரோகித்சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே, குர்னூர் பிரார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து: பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ஜோஷ் டாங்கு.















