எஸ்.பி.ஐ லேட்டஸ்ட் எஃப்.டி வட்டி விகிதம்: இன்றைய காலகட்டத்தில் பல்வேறு முதலீட்டு கருவிகள் உள்ளன. இதில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு நல்ல வரவேற்பு எப்போதும்
மக்கள் மத்தியில் உள்ளது. குறிப்பாக அனைத்து தரப்பு வயதினரும் இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். நிலையான மற்றும் உத்தரவாதமான வருவாய் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணம். ஃபிக்சட் டெபாசிட்டை பொருத்தமட்டில் பல்வேறு வகைகள் உள்ளன.
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு
அதாவது இதில் திரும்பப் பெறக்கூடிய பிக்சட் டெபாசிட் திரும்ப அழைக்க முடியாத ஃபிக்ஸட் டெபாசிட் என இருவகைகள் உள்ளன. குறிப்பிட்ட சில காலத்திற்கு முதலீடு செய்யப்பட்ட டெபாசிட் திரும்ப அழைக்கப்படாத டெபாசிட் என்றால், அவைகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன் திரும்ப பெறுவது கடினம்.
இது மட்டுமின்றி வருமான வரி விளக்கு அளிக்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்களும் உள்ளன. இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் ஐந்து ஆண்டுகளுக்கு கால அளவை கொண்டுள்ளன.
எனினும் இது வங்குக்கு வங்கி மாறுபடும். அதே நேரம் டெபாசிட் காலத்தை பொருத்தும் அதன் வட்டி விகிதமும் மாறுபடும். பொதுத்துறை வங்கிகளை காட்டிலும் தனியார் வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை ஃபிக்சட் டெபாசிட்டுக்கு வழங்குகின்றன.
மறுபுறம் தனியார் வங்கிகளை காட்டிலும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் அதிகளவு வட்டி விகிதங்களை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்குகின்றன.
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்
எனினும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் ரூ. 5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு மட்டுமே ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட காப்பீடு விதிகள் பொருந்தும் என்பதையும் முதலீட்டாளர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
இது தொடர்பாக ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் அது குறித்து வங்கி அதிகாரிகளிடம் முறையாக கேட்டு தெளிவடைவது நல்லது.
இந்த நிலையில் நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன? ₹.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்? என்பன குறித்து பார்க்கலாம்.
| எஸ்.பி.ஐ எஃப்.டி காலம் | வட்டி விகிதம் (%) ' |
| 1 ஆண்டு | 7.30 |
| 2 ஆண்டு | 7.50 |
| 3 ஆண்டு | 7.25 |
| 5 ஆண்டு | 7.50 |
எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி
எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி திட்டத்தை பொறுத்தவரை, 444 நாள்கள் கால அளவு ஆகும். இந்தத் திட்டத்தில் 7.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதில், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மூத்தக் குடிமக்கள் ரூ.1,09, 630 பெறலாம்.
அதுவே பொதுக்குடிமக்கள், ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 280 பெறுவார்கள். வட்டியாக மட்டும் ரூ. 9,280 கிடைக்கும். இந்தத் திட்டத்தின் காலம் தோராயமாக ஓராண்டு 79 நாள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பெஸ்ட் வரி சேமிப்பு திட்டங்கள்.. சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!









